கனமழை: ரெட் அலார்ட் எச்சரிக்கை; நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் இன்றைய தினம் பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று அடைமழை பெய்தது. இதனால் இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் மதிய உணவிற்கு பின்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

மழை

இந்த நிலையில் நாளைய தினம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்கிறது.

இதனால் கனமழை முன்னெச்சரிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளைய தினம் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளன. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment