நாளை சென்னை உள்பட எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை: முழு விபரங்கள்

வங்க கடலில் தோன்றிய புயல் காரணமாக இன்று திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மதியத்திற்கு மேல் வேலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள ’மாண்டஸ்’ புயல் நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்புகள் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நாளை மறுநாளும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் இதே போன்ற விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.