நாளை:5 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை! 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!

நவம்பர் 1ஆம் தேதி தான் நம் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு பள்ளி திறக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகுழந்தைகள்

இந்த நிலையில் நம் தமிழகத்தில் தற்போது அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன.ஏனென்றால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் தற்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேற்கூறிய மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. வட தமிழக மாவட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் நாளைய தினம்  மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

இதனால் 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும், இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment