நாளைய தினம் தான் தமிழகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் தற்போது ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் தினசரி சந்தைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் காணப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து வரிசையாக ரயிலில், சிறப்பு பேருந்துகளில் பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
அவர்களுக்கு பணிபுரியும் இடங்களில் வரிசையாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா முதலமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி நாளைய தினம் தமிழகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
இதனால் நாளைய தினம் தான் கேரளாவில் தமிழ் மக்கள் வாழும் 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 12 ஆண்டுகளாக கேரளாவில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேரள முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் விளைவாக கேரளாவில் நாளைய தினம் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொங்கல் விடுமுறை ஜனவரி 15ஆம் தேதி என்று அறிவித்து இருந்ததை மாற்றி நாளை விடுமுறை என அறிவித்துள்ளது.
கேரளாவில் 6 மாவட்டங்களுக்கான பொங்கல் விடுமுறையில் ஜனவரி 14ம் தேதி அறிவிக்க முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று கேரளாவில் 6 மாவட்டங்களில் நாளை பொங்கல் விடுமுறை என அறிவிப்பு வெளியாகிவிட்டது. கேரள முதலமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.