
தமிழகம்
நாளை வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!!
நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த மாவட்டங்களில் கண்காணிப்பு குழுவினர் விரைந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறி இருந்தார். மேலும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
அதன்படி கன மழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.
சில நாட்களாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழையின் தாக்கம் சற்று தீவிரமாக காணப்படுகிறது.
