தமிழக மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் திறனறிவு தேர்வு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன் படி, நடப்பாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்கள் திறனறிவு தேர்வில் பங்கேற்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. குறிப்பாக தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வீதம் சுமார் 2 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
இதற்கு வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி வரையில் www.dge.tn.gov.in <http://www.dge.tn.gov.ins என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை |அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் திறனறிவு தேர்வில் விண்ணப்பம் செய்வதற்கு நாளைய தினம் கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி தேர்வு நடைப்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.