தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள்!!

நம் தமிழகத்தில் உள்ள பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் தமிழக அரசு தற்காலிக ஆசிரியர் பணியினை நியமித்துள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் என்பதும் அறிவிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

அதன்படி அரசு பள்ளிகளில் உள்ள சுமார் 13,331 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று அறிவித்துள்ளது. நாளை மாலை வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்ட கல்வி அலுவலர்களின் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தினமே விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment