முக்கியமான செய்தி:நாளை 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டே வந்தது. இதன் விளைவாக தலைநகர் சென்னை மாநகருக்குள் மூழ்கித் தத்தளித்தது.

பள்ளிகள் விடுமுறை

இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் உள்ள பெருவாரியான பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தன.ஏற்கனவே தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இருப்பினும் கனமழை காரணமாக திறக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் வரிசையாக மூடப்பட்டன. இந்த நிலையில் நாளைய தினம் 5 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்  நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் மூன்று மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, குமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளைய தினம் சனிக்கிழமை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும், மூன்று மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment