நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு!!!

கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் நாளைய தினத்தில் தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாளை தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுவதால் அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற 27-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். அன்றைய தினத்தில் அரசு தேர்வுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த விடுமுறை பொருந்தாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இத்தகைய அறிவிப்பால் அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து நாளை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment