கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்பட்டது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதோடு வடதமிழக மற்றும் கன்னியாகுமரி போன்ற பல மாவட்டங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது.

தாழ்வான பகுதி

இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் முகாம்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் பல பள்ளிகள் கூட தற்போது வரை முகாம்களாக செயல்பட்டு வருகிறது. இதனால் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வரும் இரண்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று கூறியுள்ளார். ஆவடி நடுக்குத்தகை நடுநிலைப்பள்ளி, மற்றும் திருத்தணி பூனிமாங்காடு உயர்நிலை பள்ளிக்கு நாளைய தினம் விடுமுறை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment