குஷியோ குஷி!! நாளை இந்த தாலுகாவிற்கு விடுமுறை..!!

தமிழகத்தில் வடகிழகு பருவமழை தொடங்கியதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் நீர் நிரம்பியுள்ளதால் மாணவர்கள் கடும் சிறமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நாளைய தினத்தில் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கல்விநிறுவனங்கள் நாளைய தினத்தில் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் மெய்யநாதன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன் தற்போது பெய்த மழையின் காரணமாக மாணவர்களின் புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி விட்டதாக தெரிவித்தார்.

இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார். அதே போல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக புதிய புத்தகம் வழங்குவதற்கு கணக்கெடுக்க உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் நாளைய தினத்தில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் இல்லையென்று கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment