குஷியோ குஷி!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்று கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி புத்தாடையுடன் 2 பள்ளி மாணவிகள் மாயம்… திண்டுக்கலில் பரபரப்பு!!

இந்த சூழலில் தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தாக கூறப்படுகிறது. குறிப்பாக சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக நாளை விடுமுறை அளிக்க வேண்டும் தெரிவித்தனர்.

இதனை ஏற்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி!!

இதனை ஈடுக்கட்டும் வகையில் வருகின்ற 19-ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment