மிரட்டும் ‘மாண்டஸ்’ புயல்: நாளை இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கனமழையின் காரணமாக நாளைய தினத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் நாளைய தினத்தில் தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

ரயில் அடியில் சிக்கிய மாணவி: ஆந்திராவில் பரபரப்பு!!

இந்நிலையில் காரைக்காலில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவிலும் ‘மாண்டஸ்’ புயல் நகர்ந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே வருகின்ற 9-ம் தேதி நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலானது கரையை கடக்கும் நேரத்தில் 85 கி.மீ. வேகம் காற்று வீசக்கூடும் என்பதால் தாழ்வான மற்றும் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வானிலை மையம் கூறியுள்ளது.

புயல் எச்சரிக்கை: பாரதிதாசன் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!!

அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.