கனமழை எதிரொலி! சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் நாளைய தினத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே போல் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இன்றைய தினத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.