குஷியோ குஷி!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மருதுபாண்டியனின் 221-வது குருபூஜையை முன்னிட்டு நாளை சிவகங்கை உள்பட ஏழு தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்ட காளையார்கோவிலில் நாளையதினத்தில் மருதுபாண்டியனின் 221-வது குருபூஜை நடைப்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

பெரும் சோகம்! உலகின் அழுக்கு மனிதர் மரணம்!!

இந்நிலையில் தற்போது 7 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன் படி, சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம், திருப்பத்தூர் தாலுக்காவில் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக். 29ல் பருவமழை தொடங்கும் – வானிலை மையம் தகவல்!

மேலும், நாளை நடைபெறும் பூஜையில் வைத்தியலிங்கம், ஓபிஎஸ் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment