
தமிழகம்
நாளை நீலகிரி மாவட்டத்திற்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக தென்காசி, நீலகிரி, கோவை கனமழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது
இந்த நிலையில் நாளைய தினம் நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி, நாளை நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நாளை இரண்டு மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
