நாளை முழு ஊரடங்கு: திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி! காவல் துறையினர் ஒத்துழைப்பு தருவார்கள்;

நாளைய தினம் தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக மக்கள் அனைவரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். அதோடு மட்டுமின்றி இன்றைய தினமே பொதுமக்கள் இறைச்சி கடைகளில் குவிந்த வண்ணம் காணப்படுகின்றனர். இந்த ஊழலில் நாளைய தினம் காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அவற்றுள் இரவு நேர போராட்டத்தின் போது ஒளிரும் சட்டைகள் அணிந்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்களுடன் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நாளைய தினம் சென்னை புறநகர் பகுதிகளில் ரயில் போக்குவரத்து சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியிருந்தது.

இவ்வாறுள்ள நிலையில் நாளைய தினத்திற்கு திருமணத்திற்கு செல்ல அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தில் நூறு பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கின் போது போலீசாரிடம் அழைப்பிதழ்களை காண்பித்து சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு சென்று வரலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment