நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.

நாளை முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கனமழை காரணமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி மேலும் சில மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் இருந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் இருந்து இன்று இரவுக்குள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment