நாளை கூடுகிறது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்: யாருடைய தலைமையில் தெரியுமா ?
இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிற மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றி வெற்றி வாகையை சூட்டியது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கனர்களுக்கு ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
