Connect with us

4 மாவட்டத்திற்கு நாளையதினம் மிக பலத்த மழை! இன்று பலத்த சூறாவளி!!

மழை

செய்திகள்

4 மாவட்டத்திற்கு நாளையதினம் மிக பலத்த மழை! இன்று பலத்த சூறாவளி!!

4 மாவட்டத்திற்கு நாளையதினம் மிக பலத்த மழை! இன்று பலத்த சூறாவளி!!

தென் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே வருகிறது. பல அணைகளும் தொடர்ச்சியாக நிறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது வானிலை ஆய்வு மையம்.கனமழை

அதைத் தொடர்ந்து நாளைய தினமும் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மதுரை ,சிவகங்கை, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்க கடலின் தென் மேற்கு கடலோரப் பகுதிகளில் இன்று பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top