Connect with us

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம் எச்சரிக்கை!

rain 2

தமிழகம்

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-வானிலை மையம் எச்சரிக்கை!

நம் தமிழகத்தில் தற்போது மெல்ல மெல்ல குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறிக் கொண்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜூன் 29-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நாளையதினம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ஜூன் 30ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை வரை மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top