நாளை ஆனி மாத அமாவாசை- பரிகாரங்கள்

eebcb7db05c73279c60b0afdf8879c84-3

ஒவ்வொரு மாத அமாவாசையுமே மிக முக்கிய அமாவாசையாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் எந்த ஒரு மந்திர ஜபம் செய்தாலும் அதற்கு பலன் அதிகம் என்பது உறுதி. ஆன்மிக ரீதியாக எந்த ஒரு செயலை ஆரம்பித்தாலும் அமாவாசையன்று வளர்பிறையில் ஆரம்பித்தால்தான் வளர்ச்சி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாளாக பார்க்கப்படுகிறது. அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகுந்த பலனை தரும். அதுவும் ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர் திதி கொடுத்தால் மிக சிறப்பு நடைமுறையில் யாரும் அதை செய்வதில்லை. ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, தை அமாவாசையோடு மொத்தமாக கூட்டமாக கோவில்களில் குவிந்து நீராடும் இடங்களில் குவிந்து திதி கொடுப்பதோடு சரி  மற்ற அமாவாசைக்கு அந்த பக்கமே செல்ல மாட்டார்கள். தற்போது ஒவ்வொரு குடும்பங்களிலும் முன் எப்போதும் இல்லாத அளவு கடுமையான பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன. இப்படியான இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு அமாவாசைக்கும், முன்னோர்கள் இறந்த திதியிலும் திதி கொடுப்பது சிறப்பு.

நாளை ஆனி மாத அமாவாசை தற்போதுதான் கோவில்கள், புண்ணிய தீர்த்தங்கள் எல்லாம் இந்த கொரோனா காலத்திற்கு பின்பு திறக்கப்பட்டு வருகிறது. அதனால் நாளை பொதுமக்கள், கொரோனாவில் உறவுகளை பலி கொடுத்தோர்,போன்றோர் புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பை தரும். மேலும் தகுந்த வேத விற்பன்னர்களை வைத்து நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பதும் சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.