ஏழரை சனி அஷ்டம சனியா?- கவலையை விடுங்க நாளை அனுமனை வழிபடுங்க!

ஒவ்வொரு வருடமும் வரும் மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்துடன் வரும் அமாவாசை திருநாளே அனுமனின் பிறந்த தினமாக அனுமன் ஜெயந்தி என கொண்டாடப்படுகிறது.

அனுமன் ஜெயந்தியன்று அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆஞ்சநேயர் தன்னை பிடிக்க வந்த சனீஸ்வரரை தினமும் பிடிக்க விடாமல் அலையவிட்டதால் ஏழரை சனி பாதிப்பு மற்றும் அஷ்டமசனி மற்றும் சனி பகவான் கொடுக்கும் இன்னல்களில் இருந்து வெளியே வர விரும்புவோர் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களை அத்துன்பங்களில் இருந்து தணிக்கும்.

நாளை நடைபெறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி எனும் அவரின் பிறந்த நாளில் அவருக்கு பிடித்தமான வடை மாலை சாற்றி வழிபடுங்கள். வெற்றிலை மாலை மற்றும் வெண்ணெய் சாற்றியும் வழிபடலாம். துளசி கலந்த பூமாலைகள் சாற்றியும் ஆஞ்சநேயரை மனமுருக வழிபட்டால் உங்கள் துன்பங்கள் துயரங்கள் விலகி ஓடும் என்பது உறுதி.

உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் சென்று வழிபடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.