தொடர் கனமழை: 5 மாவட்டங்களில் நாளையும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

இன்றைய தினம் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டன அதில் 8 மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன மீதமுள்ள 18 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

school leave

ஏனென்றால் தமிழகத்தில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு வருகிறது.

இதன் விளைவாக வட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இந்த நிலையில் நாளைய தினம் திருப்பத்தூர், சென்னை, வேலூர், திருவள்ளூர்,ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே திருப்பத்தூர்,சென்னை ஆகிய  மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில் தற்போது வேலூர், திருவள்ளூர்,ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்திருப்பது. குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் தொடர் மழை காரணமாக பல இடங்களில் நீர் தேங்கி இருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் கூறியுள்ளனர்.நாளைய தினம் அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கரையை கடக்கும் என்பதால் நாளைய தினமும் இந்த 5 மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment