நாளைய தினம் 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை:மாவட்ட ஆட்சியர் உத்தரவு;

நம் தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் விடாமல் கனமழை பெய்து வருகிறது. அதனால் வட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

மழை

நம் தலைநகரமான சென்னையில் 2015 போல  வெள்ளம் நீர் காணப்படுகிறது. இதனால் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நாளைய தினம் சென்னை மற்றும் சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த மாவட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளதன் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது.தற்போது மற்றொரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment