நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!-வானிலை மையம் அறிவிப்பு;

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழையால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றைய தினம் ஆறு மாவட்டங்களில் மிக பலத்த மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழை

அதன் தொடர்ச்சியாக நாளைய தினம் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளையதினம் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் எட்டாம் தேதியில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாமக்கல், சேலம், திண்டுக்கல், தென்காசி மற்றும் காரைக்கால் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment