நாளை 11 மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நேரில் வந்து திறப்பதாக இருந்தது பின்பு அவரின் தமிழக பயணம் கொரோனா பரவல் , பொங்கல் விடுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்டதால் தற்போது காணொலி காட்சி மூலம் அவரே நாளை திறந்து வைக்கிறார்.
தமிழ்நாட்டில் நாளை திறக்கப்பட இருக்கும் மருத்துவக்கல்லூரிகள் மொத்தம் 11 இடங்களில் திறக்கப்படுகிறது.
இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை காணொலி மூலம் நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
11 மருத்துவ கல்லூரிகளையும் தாங்களே கொண்டு வந்ததாக விளம்பரப்படுத்த திமுக அரசு முயற்சிக்கிறதா? அதிமுக அரசால் உருவான மருத்துவ கல்லூரிகளை திமுக அரசு உரிமை கொண்டாடக் கூடாது என எனவும் அவர் தெரிவித்துள்ளார்.