விண்ணை தொட்ட தக்காளி விலைக்கு விடிவுகாலம்! கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை!!

கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவிற்கு விற்கப்படுகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி

இதனால் இல்லத்தரசிகள் பலரும் காய்கறி வாங்குவதற்கு மிகவும் தயங்கினர். அதோடு அவர்கள் காய்கறி சமையலுக்கும் பதிலாக பால் சாதம், தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ்களுக்கு மாறியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடையில் தக்காளி கிடைக்கும் என்று நேற்றையதினம் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதனால் தக்காளி விலை மலிவாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறிருக்கையில் தற்போது கடலூரில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதன்படி கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் காய்கறி கடையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூபாய் 30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் இல்லத்தரசிகள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு குவிந்து வந்து தக்காளியை அள்ளி செல்கின்றனர். சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி விலை 46 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment