தக்காளி காய்ச்சல்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

சிறுவர்களை பாதிக்கும் தக்காளி வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருவதாக பிரபல மருத்து ஆய்வு இதழான லான்செட் தெரிவித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ ஆய்வு இதழில் இது தொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கேரளாவில் இதுவரையில் 82 குழந்தைகளுக்கும் ஒடிசாவில் 26 குழந்தைகளு தக்காளி வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இந்நிலையில் கடும் காய்ச்சல், உடலில் சிவப்பு நிற கொப்புளங்கள் உருவாகுவது ஆகியவை இதன் அறிகுறிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாக கூறியுள்ளது.

தற்போது இந்தியாவில் 9-வயது வரையிலான குழந்தைகளுக்கும் இதன் பாதிப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என கூறியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.