விண்ணை முட்டும் தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் காய்கறிகளின் வரத்தானது கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையான நிலையில், தற்போது 3 மடங்கு அதிகரித்து ரூ.60-க்கு விற்பனையாகுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே போன்று பீன்ஸ் ரூ.50, முருங்கைக்காய் ரூ.70, கேரட் ரூ.65, பச்சை மிளகாய் கி.லோ 45, பீர்கங்காய் ரூ. 90 என விற்பனையாகுவதாக கூறப்படுகிறது. இதனிடையே வரத்து குறைவு காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், வரும் காலங்களில் வடமாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், காய்கறிகளின் விளைச்சல் என்பது குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment