Connect with us

தமிழகத்தில் சுஙகக்கட்டணம் உயர்வு: தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பால் அதிர்ச்சி!

Tamil Nadu

தமிழகத்தில் சுஙகக்கட்டணம் உயர்வு: தேசிய நெடுஞ்சாலை அறிவிப்பால் அதிர்ச்சி!

c076cc6363cf5eae76656af12aaab57f

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது

ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் என்றும் அந்த வகையில் 14 சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்த படுவதாகவும் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட உள்ள 14 சுங்கச்சாவடிகளில் விவரங்கள் பின்வருமாறு: திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் – குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை ஆகிய 14 சுங்கச் சாவடி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top