டோக்கியோ ஒலிம்பிக்: ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி!

60e00f57c1a4dcf85bf71e161e9fc4ac

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியது என்பதும் தற்போது விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாவித் ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் தற்போது இந்திய ஹாக்கி அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

சற்றுமுன் நடந்த ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆக்ரோஷமாக மோதிய நிலையில் இந்திய அணி அபாரமாக விளையாடி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது

இந்த போட்டியில் இந்திய அணி மூன்று கோல்களும் நியூசிலாந்து அணி இரண்டு கோல்களும் பெற்றதையடுத்து இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும், இந்திய அணி ஹாக்கி போட்டி பிரிவில் கண்டிப்பாக பதக்கம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment