டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு!

9077f728a53c5fdb16e10b5422416bf7-2

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு என்பவர் வெள்ளி பதக்கம் பெற்று கொடுத்த நிலையில் மேலும் சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அந்த வகையில்தான் வெளியான தகவலின்படி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியா வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர், மற்றும் சவுரப் சவுத்ரி இணை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது சுற்றில் இந்த ஜோடி சரியாக விளையாடினால் பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மனு பாக்கர், மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி பதக்கத்தை பெற்றுத் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்த நிலையில் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யசஷ்வினி தேஸ்வால் – அபிஷேக் வர்மா இணை தோல்வி அடைந்தனர்,.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment