தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் என்று எதிர்பார்க்கிறது ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. மேலும் நகர்ப்புறங்களில் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இந்த மத்தியில் தற்போது மழை தொடர்ச்சியாக பெய்து வருவது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் வரிசையில் தற்போது தமிழகத்தில் அதிக மழைப்பொழிவை பெற்று கரூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
அதன் படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் உள்ள தொகை மலையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. அதோடு மட்டுமில்லாமல் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் நாகப்பட்டினம் நாமக்கல் காரியப்பட்டி தாத்தையங்கார்பேட்டை போன்ற பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் மதுரை விமான நிலையம். துறையூர் ,ஆத்தூர் , கொடுமுடி பொன்னேரியில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. வீரகனூர் அணை, செய்யாறு திருப்பூர், மோகனூர், கும்பகோணம், திருவாரூர் பகுதிகளில் இரண்டு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருப்பத்தூர் ,மதுராந்தகம், எடப்பாடி, கொரட்டூர் பூண்டி, திருமயம், மயிலம்பட்டி இரண்டு சென்டி மீட்டர் மழை பெய்தது.