இன்றைய ராசி பலன் – 06.5.2022

???? மேஷம் -ராசி: ????_*
தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 4
????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️அஸ்வினி : ஆதாயம் ஏற்படும்.
⭐️பரணி : வெற்றிகரமான நாள்.
⭐️கிருத்திகை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
*════════════════*

*_???? ரிஷபம் -ராசி: ????_*
எதிர்பாராத தனவரவு கிடைக்கும். இழுபறியான காரியங்களை செய்யும் பொழுது கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 6
????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️கிருத்திகை : கவனம் வேண்டும்.
⭐️ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
⭐️மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
*════════════════*

*_???? மிதுனம் -ராசி: ????_*
வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகளின் மூலம் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 2
????அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : கவனம் வேண்டும்.
⭐️புனர்பூசம் : குழப்பம் அதிகரிக்கும்.
*════════════════*

*_???? கடகம் -ராசி: ????_*
உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், ஆதாயம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 3
????அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

⭐️புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.
⭐️பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : ஆதாயம் ஏற்படும்.
*════════════════*

ஜால்ரா தட்டியவருக்கு ஆப்பு வைத்த டான் பட ஹீரோ !!! என்ன நடந்துச்சி ??

*_???? சிம்மம் -ராசி: ????_*
உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். தனவரவின் மூலம் சேமிப்பும், புத்துணர்ச்சியும் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மகம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️பூரம் : மேன்மையான நாள்.
⭐️உத்திரம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
*════════════════*

*_???? கன்னி -ராசி: ????‍♀️_*
உறவினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 2
????அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை.

⭐️உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.
⭐️சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.
*════════════════*

*_???? துலாம் -ராசி: ⚖_*
மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். ஆதாயகரமான நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 4
????அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்.

⭐️சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
⭐️சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐️விசாகம் : நிதானம் வேண்டும்.
*════════════════*

*_???? விருச்சிகம் -ராசி: ????_*
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் காலதாமதமாக நிறைவேறும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் பேச்சுக்களில் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : நெருக்கடிகள் உண்டாகும்.

அனுஷம் : தடுமாற்றமான நாள்.

கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.
*════════════════*

*_???? தனுசு -ராசி: ????_*
இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் நிதானம், கவனம், பொறுமை, மிக அவசியம். உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

⭐️மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐️பூராடம் : முயற்சிகள் ஈடேறும்.
⭐️உத்திராடம் : மேன்மை உண்டாகும்.
*═══════════════*

*_???? மகரம் -ராசி: ????_*
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். இழுபறியான வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெருமை நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 6
????அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.

⭐️உத்திராடம் : விருப்பம் நிறைவேறும்.
⭐️திருவோணம் : தாமதங்கள் விலகும்.
⭐️அவிட்டம் : ஒத்துழைப்பு மேம்படும்.
*════════════════*

*_???? கும்பம் -ராசி: ⚱_*
தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சமூக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 7
????அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

⭐️அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.
⭐️சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : சாதகமான நாள்.
*════════════════*

*_???? மீனம் -ராசி: ????_*
புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பயணங்கள் கைகூடும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். களிப்பு நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️உத்திரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.
⭐️ரேவதி : சிந்தித்து செயல்படவும்.
*┈┉┅━•• ???????? ••━┅┉┈*

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment