
Tamil Nadu
காணாமல்போன கோடை வெயில்..!! இன்றைய வானிலை நிலவரம் அறிவிப்பு;
தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் நிறைவு பெற்று விட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. இதன் மத்தியிலும் ஆங்காங்கே மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
அதன்படி இன்றைய தினம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மற்றும் புகழ்பெற்ற இடங்களில் பதிவான வானிலை விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் நிலவியது. வேலூர் மாவட்டத்தில் குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஊட்டியில் குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெயிலும் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெயிலின் தாக்கமும் பதிவாகியுள்ளது. கோயம்புத்தூரில் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெயிலும் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.
கொடைக்கானலில் குறைந்தபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெயிலும் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை நிலவரம் அளிக்கப்பட்டுள்ளது. தூங்கா நகரமான மதுரையில் 25 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெயிலின் தாக்கமும் அதிகமாக 33 டிகிரி செல்சியஸ் வெயில் தாக்கம் பதிவாகியுள்ளது.
திருச்சியில் 26 டிகிரி செல்சியஸ் வெயில் மற்றும் அதிகமாக 35 டிகிரி செல்சியஸ் வெயில் தாக்கம் இன்று மட்டும் பதிவாகிஉள்ளது. நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சமாக 26 டிகிரி வெயிலும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி உள்ளது.
