
தமிழகம்
ராக்கெட் வேகத்தில் போன கொரோனா சைக்கிள் வேகத்தில் குறைந்தது பாதிப்பு எண்ணிக்கை!!
கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்து விட்டது. ஏனென்றால் கொரோனாவின் பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக 2000 தாண்டி பதிவாகி வருவது வாடிக்கையாக மாறி உள்ளது.
இந்த நிலையில் இன்று ஒரே நாள் பாதிப்பு 2500 தாண்டி பதிவாக்கியுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 2654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் 2672 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 2654 ஆக குறைந்துள்ளது. இருப்பினும் கூட இன்றைய தினம் கொரோனா பாதிப்பால் புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் ஆயிரத்தை கடந்து கொரோனா பதிவு பதிவாகியுள்ளதால் அங்குள்ளோர் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.
அதன்படி சென்னையில் ஒரு நாளில் 1066 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளது நேற்றைய தினம் 1072 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 1066 ஆக குறைந்துள்ளது.
