Connect with us

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

School Leave

தமிழகம்

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஏனென்றால் அங்கு தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருவதால் இத்தகைய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றைய தினம் விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர். கனமழை எச்சரிக்கையின் காரணமாக இன்று ஒரு நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மேலும் ஆடிப்பெருக்கு இன்றைய தினம் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் நிலைகளில் மக்கள் இறங்கி சடங்கு சம்பிரதாயங்களை செய்வர். இதனால் பல இடங்களில் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்துக் கொள்வர். அந்த வகையில் ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top