Connect with us

இன்றைய ப்ரோமோ வெளியாகவில்லை.. ஏன் தெரியுமா?

Entertainment

இன்றைய ப்ரோமோ வெளியாகவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறது, கடந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பு விருந்தினராக  நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்தார் வனிதா, அவர் உள்நுழைந்ததே சரிந்த டிஆர்பியை  ஈடுகட்டவே என்பது அவர் வந்த முதல்நாளே தெரிந்தது.

 
அவர் முதன் முதலாக கையில் எடுத்தது அபிராமி- முகினின் நட்பினைத் தான்; அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணாதிக்கம் உள்ளதாக மதுமிதாவிடம் கூற, அது பெரும் பிரச்சினை ஆனது. வனிதா விரித்த வலையில் மாட்டிக் கொண்டது மதுமிதாதான்.

c70ad7fceed26bab2240717a9c463aff-1

லோஸ்லியா, கவின், சாண்டி, முகின், மதுமிதா ஆகியோர் மதுமிதா, சேரன் மற்றும் கஸ்தூரியைத் தாக்கும்படி பாடல்களைப் பாடி வந்தனர். இதனால் மிகுந்த அளவில் சேரனும், மதுமிதாவும் மனமுடைந்ததாகவே தெரிந்தது.

மேலும் மேலும் கவினும் சாண்டியும் மறைமுகமாக தாக்க மதுமிதா இன்று தற்கொலை முயற்சி செய்து அதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது.

கமல்ஹாசன் வீட்டின் கதவைத் திறந்துவைத்தால், வெளியேறும் முதல் நபராக நானிருப்பேன் என்று கூறிய அவர், கவினின் செயலால் பொறுக்க முடியாமல் இவ்வாறு செய்தது பலரை உலுக்கியுள்ளது.

இதனால்தான் இன்றைய ப்ரொமோ வெளியாகவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top