சென்னையில் 102 ரூபாயை தாண்டியது இன்றைய பெட்ரோல் விலை!

753e3c71fec565e76058ce6ada935e36

தமிழகத்தில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் 100 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை தற்போது 102 ரூபாயை தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு 26 காசுகள் உயர்ந்ததை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் நேற்றைய விலையான 94.39 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பெட்ரோல் டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது பெட்ரோல் விலை விரைவில் ரூபாய் 110 ரூபாயும் டீசல் விலை நூறு ரூபாயையும் தாண்டி விடும் என்று அஞ்சப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment