“மழை, மிதமானமழை, கனமழை” மூன்றுக்கும் இன்றைய தினம் வாய்ப்பு!!

0ab568acce8979cbc0d11d3eab649c1c-1

தற்போது தமிழகத்தில் காற்றுக் காலம்  நிறைவு பெற்றது என்று கூறலாம்.  தமிழகத்தில் சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் தமிழகத்தின் வெப்பநிலையானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது .இந்த நிலையில் தமிழகத்தில் மேலும்  நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இன்றைய தினம் நீலகிரி கோவை திருப்பூரில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.03f5f699b50067a94931b4dae007253b

அதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் ஈரோடு சேலம் நாமக்கல் தேனி திண்டுக்கல் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் மதுரை விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இதர மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment