அரையிறுதிக்கு நுழையுமா இந்தியா? ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து இடையே இன்று பலப்பரிட்சை!

தற்போது 20 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு பலப்பரிட்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் பி பிரிவில் இந்திய அணி உள்ளது.

நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான்

இந்த நிலையில் பி பிரிவின் சார்பில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் செல்ல நியூஸிலாந்து அணிக்கு அதிக வாய்ப்புள்ளது.

ஆனால் இந்திய அணிக்கும் ஓரளவிற்கு அரையிறுதிக்கு நுழைய வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நடைபெற உள்ளது. இன்று நடக்கும் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் இடையே உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் பிரகாசமாக காணப்படும்.

நெட் ரன் ரேட் அடிப்படையிலும் இந்தியா தற்போது 3வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை   நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் நேரடியாகவே நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

அதனால் இன்றைய போட்டி நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிக்கு  இடையே மட்டுமில்லாமல் இவை இந்தியாவுக்கும் மிகுந்த பரபரப்பை உருவாக்கி உள்ளதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment