சட்டப்பேரவையில் இன்று: காவல்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம்!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தின் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுவும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கி மே 10ஆம் தேதி வரை இந்த மானிய கோரிக்கைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக நீர்வளத் துறை சார்பில் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு துறையின் சார்பிலும் விவாதம் நடைபெற்று பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இரண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடிவெடுத்துள்ள ஸ்டாலின்..!!!

இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்றைய தினம் காவல்துறை மானியத்தின் மீது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

மேலும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சட்டத்திருத்த மசோதாவை என்று பேரவையில் தாக்கல் செய்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

எம்ஜிஆர் பல்கலைகழகத்திற்கு துணைவேந்தரை மாநில அரசு நியமிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் தொடர்ந்து மசோதாக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment