சட்டப்பேரவையில் இன்று: என்னென்ன அறிவிப்புகள்? எத்தனை புதிய தொழிற்பேட்டைகள்?
இன்றைய தினம் நம் சட்டப்பேரவையில் பல்வேறு விதமான தொழில் முன்னேற்ற அதற்கான அறிவிப்புகள் வெளியிடப் பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக மானிய கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டது. காடாம்புலியூரில் 29 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை மூலம் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.
கோவில்பட்டி அருகே லிங்கம் பட்டியில் ரூபாய் 25 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்றும் அன்பரசன் கூறினார். ராஜபாளையத்தில் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் மகளிருக்கான பொது வசதி மையம் அமைக்கப்படும் என்றும், ரூபாய் 3.75 கோடி மதிப்பு பொது வசதி மையம் உயர் தொழில்நுட்ப விசைத்தறி ஆகிய வசதியுடன் அமைக்கப்படும்.
கடலூர் மாவட்டம் மதவேடு கிராமத்தில் ரூபாய் 4.70 கோடியில் புதிய தனியார் தொழிற் பேட்டை அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 11.40 ஒரு ஏக்கரில் ரூபாய் 3.50 கோடி அரசு மானியத்துடன் அனைத்து தானியங்கி வாகன சேவை குழுமம் மூலம் தனியார் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
போதிய இட வசதி இன்றி செயல்படும் தானியங்கி வாகன சேவை கூட்டங்களை நகருக்கு வெளியே மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அலுமினிய அச்சு வார்ப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இதனால் 3000 தொழிலாளர்களுடன் இயங்கும் 1000 அலுமினியம் நிறுவனங்களுக்கு பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி கிராமத்தில் அலுமினியக் அச்சு வார்ப்பு தொழிலுக்கான ரூபாய் 5.75 கோடியில் பொது வசதி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
