இன்று நீங்கள் தான் பிக்பாஸ்! வாக்குகள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் போட்டியாளர்கள்;

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி எது என்று மக்களிடம் கேட்டால் அவர்கள் கூறுவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நம் தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனையொட்டி நிறைவு பெறும் நிலைக்கு வந்துள்ளது.

இதில் இறுதி போட்டியாளர்களாக ஐந்து பேர் உள்ளனர். அதன்படி அமீர், ராஜு, பிரியங்கா பாவணி மற்றும் நிறுப் . அவர்களுக்கு இறுதி வாரம் ஏற்றியதால் ஃபண் டாஸ்குகளே அதிகமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் நீங்கள் பிக் பாஸ் ஆக இருக்கலாம் என்றே பிக்பாஸ் குரல் எழுப்பியது.

இதனால் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்கள் பெயர் வரும்போது தங்கள் பிக்பாஸ் பதாக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்களில் பிரியங்கா பிக்பாஸ் குரலை மிகவும் வைத்துக்கொண்டு போட்டியாளர்களுக்கு ஃபண் டாஸ்குகளை கொடுக்கிறார். ஒருவேளை பைனலில் வாக்குகள் இவ்வாறு சேகரிக்கும் முயற்சியில் பிரியங்கா இருக்கிறாரா? என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

அதே வேளையில் ராஜ் தனது பாணியில் பிக்பாஸ் குரலை பயன்படுத்துகிறார். அவர் சும்மா இருந்தாலும் அவரின் வாய் நகைச்சுவை உருவாக்குவது இன்றளவும் அவருக்கு நெகட்டிவ் ரசிகர்கள் இல்லாததற்கு காரணமாக காணப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் ஃபண் டாஸ்குகளே அதிகமாக நிகழ்கிறது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/p1GGr9jRIWg” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment