Connect with us

மனைவி, மகன்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த்: வைரலாகும் செல்பிகள்

News

மனைவி, மகன்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த்: வைரலாகும் செல்பிகள்


8e4d28a560e00af948a807e4c1c0ba6a

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று காலை அவர் தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதோடு மனைவி மற்றும் மகன்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் இந்த செல்பி புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் விஜயகாந்த் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்பட பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் விஜயகாந்த் நன்றி தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

b933f45d8deee43bbd1cb415549d4b7e

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டரில் தேமுதிக தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: அதேபோல் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது கட்டுரையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘திரைத்துறை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பணியாற்றி நன்முத்திரை பதித்து வரும் விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும் நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி, உளம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் துணை முதல்வர் தனது டுவிட்டரில் கூறியதாவது: பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ எனது உளம்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top