Connect with us

இன்று, நாளை, நாளை மறுநாள்: மிதமான மழை! கனமழை! மிக கனமழை!

கனமழை

News

இன்று, நாளை, நாளை மறுநாள்: மிதமான மழை! கனமழை! மிக கனமழை!

இன்று, நாளை, நாளை மறுநாள்: மிதமான மழை! கனமழை! மிக கனமழை!

தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.கனமழை

வெப்பச்சலனம் காரணமாக ஏற்படும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, ராணிப்பேட்டையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி டெல்டா மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை மறுநாள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் அக்டோபர் 20ஆம் தேதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. விருதுநகர் நெல்லை கள்ளக்குறிச்சி சேலம் மதுரை திருச்சி பெரம்பலூர் அரியலூர் கடலூரில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

அக்டோபர் 21ம் தேதியில் டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ராமநாதபுரம், கரூர், திருச்சி மாவட்டங்களில் அக்டோபர்  இருபத்தி ஒன்றாம் தேதியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், காரைக்காலில் அக்டோபர் 21ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அக்டோபர் 22 தேதியும் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், கடலூர், விழுப்புரம், குமரி, நீலகிரி, கோவையில் அக்டோபர் 22ம் தேதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான மழை வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top