இன்று முதல் 9 வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை..!!

தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்திற்குள் நடந்து முடிந்து விடும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் மே மாதம் தான் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய தினம் முதல் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் முழு ஆண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கோடை விடுமுறையில் நீர்நிலைகளுக்கு செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பிள்ளைகளின் திறமை எதில் உள்ளது என்பதை அடையாளம் காணும் விடுமுறையாக பெற்றோர்கள் இதனை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment