
Tamil Nadu
தமிழகத்தில் இன்று தொடங்கியது அக்னி நட்சத்திரம்!! 28ம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு;
நம் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவிக்கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஏப்ரல் மாதம் முதலே வட தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிதீவிரமாக காணப்பட்டது.
இந்த நிலையில் மே மாதம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்ள நிலையில் இன்றைய தினம் முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகின்ற கத்திரி வெயிலின் தாக்கம் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே இருபத்தி எட்டாம் தேதி வரை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும்பாலும் மதிய வேளைகளில் வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
மேலும் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க தண்ணீர், தண்ணீர் பழம் உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்களை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நூறு டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
