
பொழுதுபோக்கு
ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படத்தின் அப்டேட்!! இன்றைய தினம் தொடங்கியது சூட்டிங்;
தங்களது சொந்த கதையை படமாக எடுத்து வெளியிட்டால் வெற்றி பெறலாம் என நடிகர்கள் பலரும் எண்ணிக் கொண்டுள்ளனர். ஆனால் அவை ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் காணப்படும்.
அவர்களில் ஒருவர்தான் பிரபல பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என்ற பன்முக கலைஞர் ஹிப் ஹாப் தமிழன் ஆதி. அவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் அவரின் வாழ்க்கையில் நடந்த சொந்த கதையாக காணப்படுகிறது.
மேலும் அந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருந்தார். அதில் பல்வேறு ஆசைகளோடு சினிமாவுக்குள் நுழைய வேண்டும் என்று சென்னைக்கு வரும் பட்டதாரி இளைஞன் படும் துயரங்கள், கஷ்டங்கள் வெளிக்கொணர்ந்து காட்டப்பட்டிருக்கும்.
அதன் பின்பு இறுதியில் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி அந்த இளைஞர் வெற்றி அடைந்தது போல இருக்கும். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாகவே நடித்துக்கொண்டிருக்கிறார்.
நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தன்னை நடிகராக நிரூபித்துவிட்டார் ஆதி. இந்நிலையில் தற்போது இவர் நடிப்பில் வீரன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது.
மேலும் அதற்கான ஷூட்டிங் இன்றைய தினம்தான் தொடங்கியதாகவும் தெரிகிறது. மேலும் இத்திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பதாகவும் தெரிகிறது. இதற்கு ஏ ஆர் கே சரவணன் இயக்குனராக பணியாற்றுகிறார்.
இதில் சிறப்பு என்னவென்றால் நடிகர் இப்பாப் தமிழா கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் இந்த படத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
